About Us

About Minime

மினி மீ நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக குழந்தைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யும் வணிக தளங்களை துவங்கியது. தென்காசியில் முதல் கிளை துவங்கி, தொடர்ந்து அடுத்தடுத்த கிளைகளை திருச்சி, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனீ, நாமக்கல், ஈரோடு, பெரம்பலூர்   என வணிகப் பயணம் நீளத் தொடங்கியது. மூலை முடுக்கெல்லாம் மினி மீ நிறுவனம் தொடங்கி நியாயமான விலையில் குழந்தைகளுக்கான பொருட்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். வாடிகையாளரின் தேவையை அறிந்து, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ற பொருட்களை மட்டும் பரிந்துரை செய்வதே நமது வெற்றியின் அடிக்கல்லாகும். குழந்தைகளுக்கான ஆடைகள், காலணிகள், விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள், பரிசுப் பொருட்கள் அனைத்தும் நியாயமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கச் செய்கிறோம். நமது வெற்றிப் பயணம் தொடர்ந்து இன்னும் பல கிளைகளை திறந்து வைப்பதில் தொடரும்.
VISION

உலகத்தரம் வாய்ந்த பிறந்த குழந்தைகளுக்கான பொருட்களை நியாயமான விலையில் இந்தியாவின்    மூலை முடுக்கெல்லாம் மினி மீ பேபி ஷாப்கள் மூலமாக கொண்டு சேர்ப்பது.

MISSION

நம் கடைக்கு வருகை தரும் பெற்றோர்களின் தேவையை புரிந்து, அவர்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான பொருட்களை இன்முகத்துடனும், அன்புடனும் பரிந்துரைப்பது.

VALUES

  • சுத்தம்
  • ஒழுக்கம்
  • கற்றல்
  • புதுமை
  • வாடிக்கையாளரின் மகிழ்ச்சி